Friday, May 14, 2010

தி.மு.க.வில் குஷ்பூ....

காங்கிரசில் சேர போகிறார்,அதிமுக வில் சேர போகிறார் என்று பரபரப்புகளுக்கிடயே இறுதியாக திமுகவில் கலைஞர், ஸ்டாலின் முன் சேர்ந்துள்ளார் நம்ம குஷ்பூ...விரைவில் ஒரு கவர்ச்சிகர சட்டமன்ற உறுப்பினரையோ, நாடாளுமன்ற உறுப்பினரையோ, வரப்போகும் மேலவை உறுப்பினரையோ அல்லது ஒரு அமைச்சரையோ பார்க்கலாம்..கட்சியில் உறுப்பினராக எந்த ஒரு தகுதியும் தேவையில்லை தான்...ஆனால் பதவியில் அமர எந்த தகுதி அடிப்படையில் தேர்ந்து எடுக்க படுகிறார்கள் என்பதை நம்ம கலைஞர் தான் சொல்ல வேண்டும்...

பாமர, படித்த மக்களுக்குத்தான் இந்த சினிமா மோகம் என்றால், தேர்ந்த அரசியல்வாதிகளுக்கு கூட ஏன் இந்த சினிமா மோகம் என்று தெரியவில்லை....நடிகர்கள், நடிகைகளை கட்சியில் சேர்ப்பதிலும் அவர்களை அமைச்சராக்கி அழகு பார்ப்பதிலும் பெருமகிழ்ச்சி கொள்கின்றனர்..ஏற்கனவே சினிமா துறை கலைஞர்களுக்காக வீடு கட்ட ஏக்கர் கணக்கில் இடம் கொடுத்து அதுக்காக பாராட்டு விழாவும் பெற்று கொண்டார்..யார் அப்பன் வீட்டு சொத்தை யார், யாருக்காக கொடுப்பது???கோடிக்கணக்கான பணம் பழகும் இடம் சினிமா துறை...கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் முன்னணி நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், இசை அமைப்பாளர்கள் , தயாரிப்பாளர்கள் இப்படியாக இவர்கள் ஆளுக்கு ஒரு கோடி கொடுத்தால் சினிமா துறையில் உள்ள அடிமட்ட தொழிலாளர்களுக்கு வீடு மற்ற வசதிகள் தானாக கிடைத்து விடும்...

அதை விட்டு விட்டு நாம் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தில் வரியை பிடித்து அதை இந்த மாதிரி வாரி வழங்கி கொண்டு இருக்கிறார்....இதே போல் அனைத்து துறையினருக்கும் வீடு கட்டி கொடுப்பாரா?இப்போ குஷ்பூ, இனி மும்தாஜ், கும்தாஜ், சோனா, ஏன் ஷகிலா என்று எல்லாரையும் சேர்த்துகிட்டு அமைச்சரவையிலும் இடம் கொடுத்து சாதனை புரிவார்....நாம பார்த்து சந்தோஷ பட்டுடு இருக்க வேண்டிதான்....

Sunday, May 9, 2010

இன்னும் என்ன கொடுமை எல்லாம் இருக்குதோ!!!

தமிழக மக்களுக்கு சோதனை மேல சோதனை..காலாவதி மருந்து பிரச்சனையே இன்னும் ஓய வில்லை அதுக்குள்ளே தரமற்ற உணவை சாப்பிட்டதால் மதுரையில் கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்து உள்ளார்....அதுவும் நல்ல பெரிய ஓட்டல், மதுரை ரயில் நிலையம் எதிரே உள்ளது...நூற்றுக்கணக்கான மக்கள் தினமும் வந்து உண்டு செல்லும் இடம் அது....ஒரு உயிர் பலி நடந்த பிறகுதான் அந்த ஓட்டலை மூடி, மற்ற ஓட்டல்களிலும் சோதனை மேற்கொள்கிறார்கள் சுகாதார துறை அதிகாரிகள்...

காலாவதி மருந்து விசயத்திலும் ஒரு உயிர் போகும் வரை காத்திருந்து அதன் பின்னரே களத்தில் இறங்கினார்கள்...இப்போது பண்ணும் சோதனை மத்த இத்யாதிகளை முன்னரே பண்ணி இருந்தால் சில உயிர்கள் காப்பாற்ற பட்டு இருக்கும்..ஏன் இந்த கண்டும் கண்காணாத நிலை???இப்போது கைது செய்யப்பட்டு இருப்பவர் இன்னும் கொஞ்ச நாளில் மறுபடி அதே இடத்தில ஓட்டல் ஆரம்பித்து விடுவார்..நம்ம சட்ட திட்டங்கள்...அதன் ஓட்டைகள் அப்படித்தானே இருக்கிறது...

சென்னையில் நடத்திய சோதனையில் நல்ல பெரிய பல்பொருள் அங்காடிகளில் கூட காலாவதியான குளிர்பானங்கள், நூடுல்ஸ், இடியாப்ப மாவு, போன்றவற்றை கைப்பற்றி உள்ளார்கள்..மேலும் இந்த மாதிரி பொருட்களை மொத்தமாக வாங்கி பாதி விலைக்கு விற்கும் கும்பலையும் பிடித்துள்ளார்கள்...இன்னும் என்னன்னா பூதங்கள் கிளம்ப போகிறது என தெரியவில்லை...உயிர் பலி ஆகும் வரை காத்திராமல் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அடிக்கடி ஆய்வுக்கு சென்று தரமில்லாத எந்த ஒரு ஓட்டல், பள்ளிகள், கல்லூரிகள், சினிமா அரங்கம், மால்கள், ரோட்டோர கடைகள், மருந்து கடைகள், மருத்துவர்கள், இப்படியாக எதையும் நடத்த அனுமதிக்க கூடாது...கேவலம் லஞ்ச பணத்துக்காக அனுமதி அளித்து பொது மக்கள் உயிரோடு விளையாட கூடாது...

நாமளும் நம்மை ஆளும் அரசை, அதிகாரிகளை நம்பாமல் எந்த ஒரு பொருளை வாங்கினாலும் அது தரமானதா என்று பார்த்து வாங்க வேண்டும்...காசு கம்மியாக கிடைக்கிறது என்று காண்பதை வாங்கி அவஸ்தை பட கூடாது...