Tuesday, November 24, 2009

என் பேச்சை கேட்டால்... தமிழக காமெடி.....

"தேர்தலில் ஒரு முறை மக்கள் என் பேச்சை கேட்டால், தமிழகத்தில் நல்லாட்சி நடக்கும்' என்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்...நடந்து கொண்டிருக்கும் ஆட்சி அவர் கூட்டணியில் அமைந்ததுதான் என்பது மறந்து விட்டது போலும்....இவர் மட்டுமல்ல, நமது தமிழக மக்களின் மறப்போம் மன்னிப்போம் மனது இருக்கும் வரை அனைத்து அரசியல் தலைவர்களும் இப்படித்தான் பேசுவார்கள்.....



ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை சார்ந்த மக்களுக்காக கட்சி நடத்தும் அய்யா தமிழக மக்கள் நலனை பற்றி அக்கறை கொள்வதில் மிக்க மகிழ்ச்சி நமக்கு...
ஒரு விஷயத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஜாதி பெயரை சொல்லி அரசியல் செய்யும் எந்த தலைவரும் (மன்னிக்கவும், மனிதரும்) அந்த ஜாதிக்கு நன்மை செய்ததாக சரித்தரம் இல்லை... ஜாதி என்பது அவர்கள் அரசியலில் நுழைய தேவைப்படும் ஒரு விசிடிங் கார்டு ..அவ்வளவே...நுழைந்த பிறகு விசிடிங் கார்டு தேவை இல்லை...



பா.ஜா.க. மத்தியில் ஆட்சி அமைத்த போது அவர் பேச்சை கேட்டு அவருக்கு ஓட்டு போட்டு அமைச்சரவையில் பங்கு பெற அனுப்பி வைத்தோம் ...தமிழ் மக்களுக்காக , இல்லை வேணாம் அவரை சார்ந்த மக்களுக்காக என்ன செய்தார் ??காங்கிரஸ் கூட்டணியிலும் அவர் பங்கு பெற அவர் பேச்சை கேட்டு அவருக்கு ஓட்டு போட்டு அனுப்பி வைத்தோம்....அவர் மகனுக்காக போராடி மத்திய அமைச்சரவையில் இடம் வாங்கியதுதான் மிச்சம்...அவராவது ஏதாவது செய்வார் என்று பார்த்தால், அவருக்கு புது புது மருத்துவ கல்லூரி ஆரம்பிக்க அனுமதி கொடுப்பதற்கும் ,எய்ம்ஸ் மருத்துவமனையின் தலை சிறந்த மருத்துவரும் தலைவருமான வேணுகோபாலனை வீட்டிற்கு அனுப்புவதற்குமே நேரம் சரியாக இருந்தது.


இப்போது மட்டும் அவர் பேச்சை கேட்டு என்ன நடந்து விட போகிறது ????இவரை மட்டும் நான் குறை கூறவில்லை.இந்தியாவில் உள்ள அரசியல்வாதிகள் பெரும்பாலும் இப்படித்தான் இருக்கிறார்கள்...அவர்கள் புத்திசாலிகளாக இருக்கிறார்களா இல்லை நாம் முட்டாள்களாக இருக்கிறோமா என்பது புதிராகவே இருக்கிறது....இப்போதும் கூட மத்திய அமைச்சரைவையில் எப்படியாவது தன் மகனை நுழைத்து விட வேண்டும் என்று நினைக்கிறாரே தவிர, மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருப்பதாக தெரிய வில்லை...


ஒரு தனி மனிதனை விமர்சிக்க நான் வரவில்லை...இதுதான் எல்லா கட்சி தலைவர்களின் நிலைப்பாடும்....ஜாதி ரீதியான கட்சிகளுக்கு மக்கள் ஆதரவு அளிக்க கூடாது....

Monday, November 23, 2009

நாம் இந்தியர்.....

நாம் இந்தியர் என்பதை, நாம் 'இந்தி' யர்னு மாற்றிடுவாங்க போல...நான் எத பத்தி சொல்ல வர்ரேன் னு உங்களுக்கு புரிஞ்சிருக்கும்....

"மும்பை அனைவருக்கும் சொந்தமானது'என, கூறியதற்காக இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ் மேன் சச்சினை சிவசேனா கட்சி தலைவர் பால் தாக்கரே கடுமையாக விமர்சனம் செய்திருக்கார்....என்ன கொடுமை சார் இது?? இதை கேட்க நாதியே இல்லையா இங்க??

இப்படியே எல்லாரும் மாநிலம் வாரியாக சொந்தம் கொண்டாட ஆரம்பிச்சா அப்புறம் இந்தியாகுள்ளயே நாம ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலம் போக விசா எடுக்க வேண்டி வரும் போல..பால் தாக்கரே யாரு??? இந்தியா சுதந்திரம் வாங்க பாடு பட்டாரா, இல்ல எல்லை கோட்டுல நின்னு துப்பாக்கி பிடிச்சு காவல் காத்தார?

மும்பையை சொந்தம் கொண்டாடும் தாக்கரே , எல்லை தாண்டி பயங்கரவாதம் செய்யும் பாகிஸ்தான், சீனா ராணுவ வீரர்களை தம் தொண்டர்களுடன் போய் எதிர் கொள்ள தயாரா?? சும்மா ஓட்டுக்காக மக்களை பிரிக்கும் இந்த மாதிரி வேலை யை விட்டு விட்டு வீட்டில் பேரன் பேத்திகளோடு அவர் விளையாடலாம்.....

சச்சின் மட்டுமல்லாமல் அனைத்து புகழ் பெற்ற பிரபலங்களும் தாக்கரே கருத்துக்கு எதிராக தங்களது கருத்தை பதிவு செய்ய வேண்டும்...

சிவசேனா கட்சி இந்தியாவிற்காக என்ன செய்தது?மும்பையை பாகிஸ்தான் தீவரவாதிகள் தாக்கும் பொழுது எங்கே சென்றார் இந்த தாக்கரே ?? மராத்தியர் நாங்களே விரட்டுவோம் என்று விரட்ட வேண்டியதுதானே?? இயற்கை அழிவுகள் வந்தால் மத்திய அரசுவிடமிருந்து உதவிகள் வேண்டும். அந்த நேரத்தில் நாங்களே பர்ர்த்து கொள்கிறோம் என்று சொல்ல நாதி இல்லை. .

இந்தியாவை பிளவுபடுத்தும் இது போன்ற எண்ணங்கள் உள்ள கட்சிகளை தடை செய்ய வேண்டும் .. இந்த மாதிரியான கட்சிகள் இருப்பதால்தான் நம் நாடு இன்னும் முன்னேற முடியாமல் தவிக்கிறது . மக்கள் அனைவரும் ஒன்று பட வேண்டும் ....

மும்பையில் வேலை பார்க்கும் பிற மாநிலத்தவரை அடித்து துரத்தும் முன் தாக்கரே ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும்...பிற மாநிலங்களில் மராட்டியர்களும் உண்டு என்பதை....அவர்களும் தாக்கரே போல் பிரிவினை நோய் தாக்கி மராத்தியர்களை விரட்ட நினைத்தால்???

மொழி வெறி ,இன வெறி, ஜாதி வெறி இல்லாத இந்தியாவை காண்பது எப்போது???????பதில் தெரிந்தால் எழுதுங்கள் எனக்கு....

உங்களில் ஒருவன்....அரிஸ்

உங்களில் ஒருவன்....அரிஸ்...


எனக்கு ரொம்ப நாட்களாக என் மனதில் உள்ளதை யாரிடமாவது பகிர்ந்து கொள்ள வேண்டுமென்பது என் அவா....


தின செய்திகளில் ஏதாவது ஒரு சம்பவத்தைப் படிக்கும் போதோ அல்லது தினசரி ஏதாவது சம்பவத்தைப் பார்க்கும் போதோ என் மனதில் நினைப்பதை யாரிடமாவது பகிர்ந்து கொள்ள நினைப்பேன்....

நான் நினைப்பதை இந்த பதிவுகள் மூலமாக உங்களுடன் பகிர்ந்து கொள்ள போகிறேன்....

சராசரி மக்கள், சினிமா துறை , அரசியல் , காவல் துறை என நான் படிக்கும் செய்திகள், பார்க்கும் நிகழ்வுகள் என என் மனதை பாதிக்கும் விஷயங்களை இங்கே பதிவு செய்ய போகிறேன்.