Tuesday, December 29, 2009

இந்த வார ஹிட்டு..ஷொட்டு...குட்டு...

இனிமே வாரா வாரம் , நம்ம குமுதம் ஞாநி மாதிரி ஹிட்டு..ஷொட்டு...குட்டு... ப்ளாக் போடலாம் என்று பார்க்கிறேன்..ஐடியா என்னவோ காப்பி தான் ஆனா மேட்டர் வேறயா இருக்கும்...

சரி, இந்த வார ஹிட்டு, ஷொட்டு, குட்டு பார்க்கலாமா?

ஹிட்டு: பென்னாகரம் இடைத்தேர்தலை தள்ளி வச்சு தேர்தல் கமிஷன் அறிவித்திருக்கு..ரொம்ப ஆர்வமா தேர்தலை எதிர்பார்த்துட்டு இருந்த மக்கள்
தவிப்பில் ஆழ்ந்து இருக்கிறார்கள்.எல்லா இலவசமும் போச்சே...


ஷொட்டு: பாராட்டு விழாக்களுக்கும், சம்பிரதாய விழாக்களுக்கும் நேரத்தை செலவளியாமல் ஆக்கபூர்வமான விசயங்களுக்கு நேரத்தை ஒதுக்கும் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனுக்கு இந்த வார ஷொட்டு..


குட்டு:>ஆந்திர ஆளுநராகவும் , பழுத்த பழமாகவும் இருந்து கொண்டு காம லீலைகள் புரிந்த என்.டி.திவாரி க்கு இந்த வார குட்ட்ட்டட்ட்டு ...


Sunday, December 20, 2009

தெலுங்கானா..தெலுங்கானா.....

கொஞ்ச நாட்களாக எல்லா செய்தி தாள்களிலும், சேனல்களிலும் , வலைத்தளங்களிலும் நாம் படித்து கொண்டிருப்பது, பார்த்து கொண்டிருப்பது இந்த தெலுங்கானா சமாச்சாரம் தான் .....எப்ப இருந்தோ புகஞ்சிட்டு இருந்தது இப்ப நல்ல கொழுந்து விட்டு எரியுது....யாரெல்லாம் முன்னர் ஆதரவு கொடுத்தாங்களோ அவங்கல்லாம் இப்போ எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பிச்சு இருக்காங்க....ஹ்ம்ம் எல்லாம் அரசியல் ஆதாயத்துக்காக....

ராவ் என்னவோ நினச்சு உண்ணாவிரதம் இருக்க போக, அவரை உசுப்பேத்தி சாகும் வரைக்குமான உண்ணாவிரதமாக மாற்றி, மத்திய அரசை பயமுறுத்தி அறிவிப்பு விடற வரைக்குமாக போயாச்சு....இதைத்தான் பிள்ளையார் பிடிக்க குரங்காய் போச்சுன்னு பெரியவங்க சொல்லி வச்சாங்களோ....எந்த நேரத்துல மத்திய அரசு அறிவிச்சதோ , இப்போ அதற்கு எதிர்ப்பு அலையும் பயங்கரமா இருக்கு , மற்ற மாநிலங்களையும் பிரிக்கணும் என்கிற கோஷங்களும் அதிகரிச்சு இருக்கு....

தனி தெலுங்கானா கேட்பதிலையும் ஒரு நியாயம் இருக்கிறது....பல ஆண்டுகளாகவே எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாமல் புறக்கணிக்க படுவதாலயே தனி தெலுங்கானா ஒன்றே ஒரே தீர்வு என அம்மக்கள் நினைக்கிறார்கள்....இது மத்திய அரசின் தவறே அன்றி அம்மக்களோடது அல்ல...

அவசரம் அவசரமாக அறிவிப்பு வெளியிடாமல் மெதுவாக ஆக வேண்டிய காரியங்களை செய்திருந்தால், இத்தகைய போராட்டங்களை சந்திக்கa வேண்டி இருந்திருக்காது....

சரி இதை விடுங்க...நம்ம தமிழ் நாட்டை பிரிப்பதற்காக எழும் கோஷங்களை பற்றி என்ன நினைக்கிறேர்கள்? தமிழ் நாட்டை பிரிப்பது நன்மை பயக்குமா அல்லது அவ்வாறு எண்ணுவதே தவறாகுமா?????

Tuesday, December 1, 2009

கையூட்டு.....முதல்ல இவங்கள பிடிங்க...

நம்ம ஊருல எல்லா துறைகள்ளையும் உள்ள ஒரே ஒற்றுமை என்ன என்று நாம ஆராய்ந்து பார்த்தோம் என்றால் அது கையூட்டாதான் இருக்கும்....அதாங்க லஞ்சம்...அது இல்லாத துறை ஏதுவுமே நம்ம இந்தியால கிடையாது....அதுவும் நம்ம தமிழகத்துல அது சேர் போட்டு உட்கார்ந்து ஆடுது......சமீபத்துல இந்தியால எந்த மாநிலத்தில் லஞ்சம் ஊழல் அதிகமா இருக்குது என்று ஒரு சர்வே எடுத்தாங்க...அதுல நாம முதல் இடத்தை பிடித்து பெருமை அடைகின்றோம்......

அது என்னவோ இந்தியன் தாத்தாவில் இருந்து நம்ம லஞ்ச ஒழிப்பு போலீஸ் வரை பொறி வைத்து பிடிப்பது நூறு , இருநூறு லஞ்சம் வாங்குபவர்களைதான்..இதுவரை ஒரு அமைச்சர் லஞ்சம் வாங்கியதாகவோ இல்லை ஒரு முதலமைச்சர் லஞ்சம் வாங்கி பிடி பட்டதாகவோ செய்தி வந்ததில்லை....லஞ்சம் வாங்கி பிடி பட்டவர்களுக்கு இங்கு கடுமையான தண்டனைகளும் இல்லை...

இரண்டு வாரங்களுக்கு முன் நான் தி.நகர் சென்று இருந்தேன்...எப்பொழுதும் பணம் செலுத்தி பார்க்கிங் ஏரியால விட்டு தான் போவேன்...சரி இந்த முறை சென்னை சில்க்ஸ் போறதால, பாலத்துக்கு கீழ உள்ள பார்க்கிங் ஏரியால விட்டு போலாம் என்று பாலத்துக்கு கீழ வண்டில வந்தேன்...ஆனா என் நேரம் கொஞ்சம் கூட இடமே இல்லை...சரி அப்படியே நேர போய் காசு கொடுத்து வண்டிய பார்க் பண்ணலாம் என்று நேர போனேன்....இடது பக்கம் பாண்டி பசாரில் இருந்து எல்லா வாகனங்களும் தி.நகர் செல்லவும், துரைசாமி பாலம் செல்லவும் அப்படித்தான் வரும்....நான் கிடைச்ச சந்து வழியாக நேர போறேன், ஒரு போக்குவரத்து துணை ஆய்வாளர் வந்து என்னை மறிச்சு ஓரமா கூட்டிட்டு போறார்...சரி, ஓட்டுனர் உரிமம் தான் கேட்க போறார் என்று போன, அது ஒரூ வழி பாதை...நீங்க வந்தது தப்பு என்கிறார்...

அது ஒரு வழி பாதை என்பதற்கு எந்த ஒரு அறிவிப்பும் இல்லை...புதிதாக வருபவர்களுக்கு ஏப்படி தெரியும்?? அதுவும் நான் வரும் வரை பார்த்துட்டு இருந்து இருக்கிறார்...என்னை தடுத்து இருக்கலாம்....ஆனால் அது அவர் எண்ணம் இல்லை....அபராதம கட்டுங்க என்றார்...எவ்வளவு சார் என்றேன்...நானுற்று ஐம்பது ....நானும் எவ்வளவோ கெஞ்சி பார்க்கறேன்...காசு வாங்காம அவர் விடுறதா இல்லை...கடைசில நூறு ரூபாய் கொடுத்த பிறகுதான் என்னை விட்டார்..

ஒரு பொறுப்புள்ள அதிகாரி என்றால் நான் தப்பான வழியில் வரும் முன் என்னை தடுத்து இருக்க வேண்டும்....அதுக்குத்தான் போலீஸ் இருக்காங்க...அதை விட்டு விட்டு காசு பிடுங்குவதை மட்டுமே வேலையாக பார்க்க கூடாது...ஒரு சிலரால் நேர்மையான மற்றவர்களை கூட தப்பாக நினைக்க தோன்றுகிறது...இந்தியாவில் லஞ்சம் வாங்குபவர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்க வேண்டும்....அதை பார்த்து லஞ்சம் வாங்க மற்றவர்கள் யோசிக்க வேண்டும்.....

லஞ்சம் இல்லாத துறை ஏதாவது இருக்கிறதா????இருந்தால் சொல்லுங்களேன்.....