Tuesday, December 29, 2009

இந்த வார ஹிட்டு..ஷொட்டு...குட்டு...

இனிமே வாரா வாரம் , நம்ம குமுதம் ஞாநி மாதிரி ஹிட்டு..ஷொட்டு...குட்டு... ப்ளாக் போடலாம் என்று பார்க்கிறேன்..ஐடியா என்னவோ காப்பி தான் ஆனா மேட்டர் வேறயா இருக்கும்...

சரி, இந்த வார ஹிட்டு, ஷொட்டு, குட்டு பார்க்கலாமா?

ஹிட்டு: பென்னாகரம் இடைத்தேர்தலை தள்ளி வச்சு தேர்தல் கமிஷன் அறிவித்திருக்கு..ரொம்ப ஆர்வமா தேர்தலை எதிர்பார்த்துட்டு இருந்த மக்கள்
தவிப்பில் ஆழ்ந்து இருக்கிறார்கள்.எல்லா இலவசமும் போச்சே...


ஷொட்டு: பாராட்டு விழாக்களுக்கும், சம்பிரதாய விழாக்களுக்கும் நேரத்தை செலவளியாமல் ஆக்கபூர்வமான விசயங்களுக்கு நேரத்தை ஒதுக்கும் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனுக்கு இந்த வார ஷொட்டு..


குட்டு:>ஆந்திர ஆளுநராகவும் , பழுத்த பழமாகவும் இருந்து கொண்டு காம லீலைகள் புரிந்த என்.டி.திவாரி க்கு இந்த வார குட்ட்ட்டட்ட்டு ...


2 comments:

  1. நடத்துங்க நடத்துங்க
    திவாரி மேட்டரை நான் போட்டீருந்த ஹிட்டுல போட்டுருப்பேன்,, :-)

    ReplyDelete
  2. நானும் ஹிட்டுலத்தான் போட்ருப்பேன் ஆனா யாராவது நமக்கு குட்டு வச்சுரகூடதே..வந்ததுக்கு நன்றி பிரதாப்..

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.