Saturday, January 2, 2010

சட்டம் ஒரு இருட்டறை...

சட்டம் ஒரு இருட்டறை என்பது நம்ம நாட்டுக்கு நன்றாக பொருந்தும்....எங்கு குற்றங்கள் ரொம்ப மலிவாக நடக்கிறது என்று பார்த்தால் அதில் நாம முதல் பத்து இடங்களுக்குள்ள இருப்போம் என்று நினைகிறேன்...(புள்ளி விவரம் தெரியவில்லை) ..மலிவாக நடப்பதற்கு காரணம் என்ன என்று பார்த்தால் சட்டங்கள் இங்கு கடுமையாக இல்லை...கொலை, கொள்ளை, கற்பழிப்பு செய்தால் வெகு சீக்கிரமாக வெளியே வர மாதிரிதான் நம்ம சட்டங்களும் இருக்கு, அதுக்கு அளிக்கபடுற தண்டனைகளும் இருக்கிறது...பச்சிளம் குழந்தையை கொலை செய்தால் கூட அவர்களுக்கு கடும் தண்டனை கிடைப்பதில்லை...

சந்தேகம் காரணமாகவும், கள்ளக்காதலுக்கு இடைஞ்சல் என்றும், குழந்தைகள் கொலை செய்ய படுவதை நாம் ஊடகங்கள் மூலமாக தினமும் படித்து கொண்டும், பார்த்து கொண்டும், கேட்டு கொண்டும் இருக்கிறோம்...ஆனால் அதற்காக அளிக்கப்படும் தண்டனையோ மிக குறைவு....இது மற்றவர்களை ஊக்குவிக்குமே தவிர தவறு செய்ய அஞ்ச வைக்காது....நம் நாட்டில் தான் தினமும் எத்தனை கொலைகள், கொள்ளைகள், கற்பழிப்புகள்..எப்பவோ நம் முன்னோர்கள் வகுத்து வைத்த சட்டங்களை இப்பவும் அப்படியே கடை பிடிப்பது வளர்ந்து வரும் நமது சமுதாயத்துக்கு நல்லது அல்ல....

இப்போது உள்ள காலத்திற்கு ஏற்ப சட்டங்களை மாற்றி அமைக்க வேண்டும்...சட்டங்களை கடுமையானதாக மற்ற வேண்டும்...கொலை செய்தால் மரண தண்டனை...அதுவும் பொது மக்கள் முன்னிலையில்..குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தால், பொது இடத்தில் வைத்து அணு அணுவாக சித்ரவதை செய்து மரண தண்டனை, கற்பழித்தால் ஆணுறுப்பை துண்டிப்பது...இது எதுவுமே புதுசு அல்ல..அரேபியா நாடுகளில் நடக்கும் ஒன்றுதான்...

நம் நாட்டில் தான் கொலை, கற்பழிப்பு வழக்குகளில் சிக்கியுள்ளவர்கள் அரசியலில் ஈடுபட்டு உயர் பொறுப்பு வகிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன....இதையெல்லாம் மாற்றினாலே பாதி குற்றங்கள் குறைந்து விடும்....முதலமைச்சர், ஆளுநர், போலீஸ் அதிகாரி என உயர் பொறுப்புகளில் இருப்பவர்கள் தவறு செய்தால் அதற்கு தண்டனை கிடைத்தால் அது மிக ஆச்சரியம்...அப்படியே கிடைத்தாலும் அது மிக மிக குறைந்த தண்டனையே....நமது நாட்டில் சட்டம் ஒரு இருட்டறைதான் ...

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.