Tuesday, March 22, 2011

இதுதான் பகுத்தறிவா?


பகுத்தறிவு பகுத்தறிவு என்று சொல்கிறார்களே , அதானோ இது???


Saturday, July 3, 2010

சிந்திக்க......

வேலூரில் தி.மு.க கவுன்சிலர் ஒருவர் முதல்வருக்கு கோவில் கட்டி உள்ளார்...உசுரோட உள்ள ஒருவருக்கு கோவில் கட்டி கும்பிடற மட சாம்பிராணிகள் நம்ம ஊரில் தான் இருக்கிறார்கள்..முன்னர் குஷ்புவுக்கு கட்டினார்கள், இப்போ கவுன்சிலர் ஒருத்தரே, கடவுள் நம்பிக்கை சிறிதும் இல்லாத முதல்வர் அவர்களுக்கு கோவில் கட்டி உள்ளார்...அவர் எதை எதிர்பார்த்து கட்டினார் என்பது அவருக்கே வெளிச்சம்...(கோவிலை அப்புறபடுத்தி விட்டார்கள் என்பது வேற விஷயம்)

ஆரவாரமா கட்சியில சேர்ந்த குஷ்பூ சத்தமே இல்லாமல் அமைதி ஆகி விட்டார்...எதிர்பார்த்த முக்கியத்துவம் கிடைக்கவில்லை, வர போகிற மேலவையிலும் இடம் கிடைப்பதற்கான அறிகுறி இல்லை...மூத்த அமைச்சர்கள் , மகள் எதிர்ப்பலைகளால் குஷ்புவை பிரசார பீரங்கியாக மட்டும் உபயோகப்படுத்தி கொள்ளலாம் என்று தலைவர் எண்ணி விட்டார் போலும்...

பெண் போலீஸ் ஒருவரை திருமணம் செய்து கொண்ட ராணுவ வீரர் ஒருவர் இன்னொரு திருமணம் செய்யவிருந்த நிலையில் பெண் போலீஸ் தர்ணா செய்து திருமணத்தை தடுத்து நிறுத்தி உள்ளார்..பெண் போலீஸ் ஆகிய அவருக்கே இந்த நிலை என்றால் சாதாரண பெண்ணிற்கு என்ன நிலை???

தமிழ் ஈழம், விடுதலை புலிகள் என்று இங்கு உள்ள அரசியல் தலைவர்கள் அரசியல் நடத்தி கொண்டு இருந்தார்கள்...போர் முடிவுக்கு வந்த பின் அங்கு இருக்கும் தமிழ் ஈழ மக்களை பற்றி யாரும் இங்கு கவலை பட காணோம்...அவர்கள் துயர் துடைக்க ஒரு முயற்சியும் எடுக்க காணோம்....

Friday, May 14, 2010

தி.மு.க.வில் குஷ்பூ....

காங்கிரசில் சேர போகிறார்,அதிமுக வில் சேர போகிறார் என்று பரபரப்புகளுக்கிடயே இறுதியாக திமுகவில் கலைஞர், ஸ்டாலின் முன் சேர்ந்துள்ளார் நம்ம குஷ்பூ...விரைவில் ஒரு கவர்ச்சிகர சட்டமன்ற உறுப்பினரையோ, நாடாளுமன்ற உறுப்பினரையோ, வரப்போகும் மேலவை உறுப்பினரையோ அல்லது ஒரு அமைச்சரையோ பார்க்கலாம்..கட்சியில் உறுப்பினராக எந்த ஒரு தகுதியும் தேவையில்லை தான்...ஆனால் பதவியில் அமர எந்த தகுதி அடிப்படையில் தேர்ந்து எடுக்க படுகிறார்கள் என்பதை நம்ம கலைஞர் தான் சொல்ல வேண்டும்...

பாமர, படித்த மக்களுக்குத்தான் இந்த சினிமா மோகம் என்றால், தேர்ந்த அரசியல்வாதிகளுக்கு கூட ஏன் இந்த சினிமா மோகம் என்று தெரியவில்லை....நடிகர்கள், நடிகைகளை கட்சியில் சேர்ப்பதிலும் அவர்களை அமைச்சராக்கி அழகு பார்ப்பதிலும் பெருமகிழ்ச்சி கொள்கின்றனர்..ஏற்கனவே சினிமா துறை கலைஞர்களுக்காக வீடு கட்ட ஏக்கர் கணக்கில் இடம் கொடுத்து அதுக்காக பாராட்டு விழாவும் பெற்று கொண்டார்..யார் அப்பன் வீட்டு சொத்தை யார், யாருக்காக கொடுப்பது???கோடிக்கணக்கான பணம் பழகும் இடம் சினிமா துறை...கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் முன்னணி நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், இசை அமைப்பாளர்கள் , தயாரிப்பாளர்கள் இப்படியாக இவர்கள் ஆளுக்கு ஒரு கோடி கொடுத்தால் சினிமா துறையில் உள்ள அடிமட்ட தொழிலாளர்களுக்கு வீடு மற்ற வசதிகள் தானாக கிடைத்து விடும்...

அதை விட்டு விட்டு நாம் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தில் வரியை பிடித்து அதை இந்த மாதிரி வாரி வழங்கி கொண்டு இருக்கிறார்....இதே போல் அனைத்து துறையினருக்கும் வீடு கட்டி கொடுப்பாரா?இப்போ குஷ்பூ, இனி மும்தாஜ், கும்தாஜ், சோனா, ஏன் ஷகிலா என்று எல்லாரையும் சேர்த்துகிட்டு அமைச்சரவையிலும் இடம் கொடுத்து சாதனை புரிவார்....நாம பார்த்து சந்தோஷ பட்டுடு இருக்க வேண்டிதான்....

Sunday, May 9, 2010

இன்னும் என்ன கொடுமை எல்லாம் இருக்குதோ!!!

தமிழக மக்களுக்கு சோதனை மேல சோதனை..காலாவதி மருந்து பிரச்சனையே இன்னும் ஓய வில்லை அதுக்குள்ளே தரமற்ற உணவை சாப்பிட்டதால் மதுரையில் கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்து உள்ளார்....அதுவும் நல்ல பெரிய ஓட்டல், மதுரை ரயில் நிலையம் எதிரே உள்ளது...நூற்றுக்கணக்கான மக்கள் தினமும் வந்து உண்டு செல்லும் இடம் அது....ஒரு உயிர் பலி நடந்த பிறகுதான் அந்த ஓட்டலை மூடி, மற்ற ஓட்டல்களிலும் சோதனை மேற்கொள்கிறார்கள் சுகாதார துறை அதிகாரிகள்...

காலாவதி மருந்து விசயத்திலும் ஒரு உயிர் போகும் வரை காத்திருந்து அதன் பின்னரே களத்தில் இறங்கினார்கள்...இப்போது பண்ணும் சோதனை மத்த இத்யாதிகளை முன்னரே பண்ணி இருந்தால் சில உயிர்கள் காப்பாற்ற பட்டு இருக்கும்..ஏன் இந்த கண்டும் கண்காணாத நிலை???இப்போது கைது செய்யப்பட்டு இருப்பவர் இன்னும் கொஞ்ச நாளில் மறுபடி அதே இடத்தில ஓட்டல் ஆரம்பித்து விடுவார்..நம்ம சட்ட திட்டங்கள்...அதன் ஓட்டைகள் அப்படித்தானே இருக்கிறது...

சென்னையில் நடத்திய சோதனையில் நல்ல பெரிய பல்பொருள் அங்காடிகளில் கூட காலாவதியான குளிர்பானங்கள், நூடுல்ஸ், இடியாப்ப மாவு, போன்றவற்றை கைப்பற்றி உள்ளார்கள்..மேலும் இந்த மாதிரி பொருட்களை மொத்தமாக வாங்கி பாதி விலைக்கு விற்கும் கும்பலையும் பிடித்துள்ளார்கள்...இன்னும் என்னன்னா பூதங்கள் கிளம்ப போகிறது என தெரியவில்லை...உயிர் பலி ஆகும் வரை காத்திராமல் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அடிக்கடி ஆய்வுக்கு சென்று தரமில்லாத எந்த ஒரு ஓட்டல், பள்ளிகள், கல்லூரிகள், சினிமா அரங்கம், மால்கள், ரோட்டோர கடைகள், மருந்து கடைகள், மருத்துவர்கள், இப்படியாக எதையும் நடத்த அனுமதிக்க கூடாது...கேவலம் லஞ்ச பணத்துக்காக அனுமதி அளித்து பொது மக்கள் உயிரோடு விளையாட கூடாது...

நாமளும் நம்மை ஆளும் அரசை, அதிகாரிகளை நம்பாமல் எந்த ஒரு பொருளை வாங்கினாலும் அது தரமானதா என்று பார்த்து வாங்க வேண்டும்...காசு கம்மியாக கிடைக்கிறது என்று காண்பதை வாங்கி அவஸ்தை பட கூடாது...

Saturday, January 2, 2010

சட்டம் ஒரு இருட்டறை...

சட்டம் ஒரு இருட்டறை என்பது நம்ம நாட்டுக்கு நன்றாக பொருந்தும்....எங்கு குற்றங்கள் ரொம்ப மலிவாக நடக்கிறது என்று பார்த்தால் அதில் நாம முதல் பத்து இடங்களுக்குள்ள இருப்போம் என்று நினைகிறேன்...(புள்ளி விவரம் தெரியவில்லை) ..மலிவாக நடப்பதற்கு காரணம் என்ன என்று பார்த்தால் சட்டங்கள் இங்கு கடுமையாக இல்லை...கொலை, கொள்ளை, கற்பழிப்பு செய்தால் வெகு சீக்கிரமாக வெளியே வர மாதிரிதான் நம்ம சட்டங்களும் இருக்கு, அதுக்கு அளிக்கபடுற தண்டனைகளும் இருக்கிறது...பச்சிளம் குழந்தையை கொலை செய்தால் கூட அவர்களுக்கு கடும் தண்டனை கிடைப்பதில்லை...

சந்தேகம் காரணமாகவும், கள்ளக்காதலுக்கு இடைஞ்சல் என்றும், குழந்தைகள் கொலை செய்ய படுவதை நாம் ஊடகங்கள் மூலமாக தினமும் படித்து கொண்டும், பார்த்து கொண்டும், கேட்டு கொண்டும் இருக்கிறோம்...ஆனால் அதற்காக அளிக்கப்படும் தண்டனையோ மிக குறைவு....இது மற்றவர்களை ஊக்குவிக்குமே தவிர தவறு செய்ய அஞ்ச வைக்காது....நம் நாட்டில் தான் தினமும் எத்தனை கொலைகள், கொள்ளைகள், கற்பழிப்புகள்..எப்பவோ நம் முன்னோர்கள் வகுத்து வைத்த சட்டங்களை இப்பவும் அப்படியே கடை பிடிப்பது வளர்ந்து வரும் நமது சமுதாயத்துக்கு நல்லது அல்ல....

இப்போது உள்ள காலத்திற்கு ஏற்ப சட்டங்களை மாற்றி அமைக்க வேண்டும்...சட்டங்களை கடுமையானதாக மற்ற வேண்டும்...கொலை செய்தால் மரண தண்டனை...அதுவும் பொது மக்கள் முன்னிலையில்..குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தால், பொது இடத்தில் வைத்து அணு அணுவாக சித்ரவதை செய்து மரண தண்டனை, கற்பழித்தால் ஆணுறுப்பை துண்டிப்பது...இது எதுவுமே புதுசு அல்ல..அரேபியா நாடுகளில் நடக்கும் ஒன்றுதான்...

நம் நாட்டில் தான் கொலை, கற்பழிப்பு வழக்குகளில் சிக்கியுள்ளவர்கள் அரசியலில் ஈடுபட்டு உயர் பொறுப்பு வகிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன....இதையெல்லாம் மாற்றினாலே பாதி குற்றங்கள் குறைந்து விடும்....முதலமைச்சர், ஆளுநர், போலீஸ் அதிகாரி என உயர் பொறுப்புகளில் இருப்பவர்கள் தவறு செய்தால் அதற்கு தண்டனை கிடைத்தால் அது மிக ஆச்சரியம்...அப்படியே கிடைத்தாலும் அது மிக மிக குறைந்த தண்டனையே....நமது நாட்டில் சட்டம் ஒரு இருட்டறைதான் ...

Tuesday, December 29, 2009

இந்த வார ஹிட்டு..ஷொட்டு...குட்டு...

இனிமே வாரா வாரம் , நம்ம குமுதம் ஞாநி மாதிரி ஹிட்டு..ஷொட்டு...குட்டு... ப்ளாக் போடலாம் என்று பார்க்கிறேன்..ஐடியா என்னவோ காப்பி தான் ஆனா மேட்டர் வேறயா இருக்கும்...

சரி, இந்த வார ஹிட்டு, ஷொட்டு, குட்டு பார்க்கலாமா?

ஹிட்டு: பென்னாகரம் இடைத்தேர்தலை தள்ளி வச்சு தேர்தல் கமிஷன் அறிவித்திருக்கு..ரொம்ப ஆர்வமா தேர்தலை எதிர்பார்த்துட்டு இருந்த மக்கள்
தவிப்பில் ஆழ்ந்து இருக்கிறார்கள்.எல்லா இலவசமும் போச்சே...


ஷொட்டு: பாராட்டு விழாக்களுக்கும், சம்பிரதாய விழாக்களுக்கும் நேரத்தை செலவளியாமல் ஆக்கபூர்வமான விசயங்களுக்கு நேரத்தை ஒதுக்கும் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனுக்கு இந்த வார ஷொட்டு..


குட்டு:>ஆந்திர ஆளுநராகவும் , பழுத்த பழமாகவும் இருந்து கொண்டு காம லீலைகள் புரிந்த என்.டி.திவாரி க்கு இந்த வார குட்ட்ட்டட்ட்டு ...


Sunday, December 20, 2009

தெலுங்கானா..தெலுங்கானா.....

கொஞ்ச நாட்களாக எல்லா செய்தி தாள்களிலும், சேனல்களிலும் , வலைத்தளங்களிலும் நாம் படித்து கொண்டிருப்பது, பார்த்து கொண்டிருப்பது இந்த தெலுங்கானா சமாச்சாரம் தான் .....எப்ப இருந்தோ புகஞ்சிட்டு இருந்தது இப்ப நல்ல கொழுந்து விட்டு எரியுது....யாரெல்லாம் முன்னர் ஆதரவு கொடுத்தாங்களோ அவங்கல்லாம் இப்போ எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பிச்சு இருக்காங்க....ஹ்ம்ம் எல்லாம் அரசியல் ஆதாயத்துக்காக....

ராவ் என்னவோ நினச்சு உண்ணாவிரதம் இருக்க போக, அவரை உசுப்பேத்தி சாகும் வரைக்குமான உண்ணாவிரதமாக மாற்றி, மத்திய அரசை பயமுறுத்தி அறிவிப்பு விடற வரைக்குமாக போயாச்சு....இதைத்தான் பிள்ளையார் பிடிக்க குரங்காய் போச்சுன்னு பெரியவங்க சொல்லி வச்சாங்களோ....எந்த நேரத்துல மத்திய அரசு அறிவிச்சதோ , இப்போ அதற்கு எதிர்ப்பு அலையும் பயங்கரமா இருக்கு , மற்ற மாநிலங்களையும் பிரிக்கணும் என்கிற கோஷங்களும் அதிகரிச்சு இருக்கு....

தனி தெலுங்கானா கேட்பதிலையும் ஒரு நியாயம் இருக்கிறது....பல ஆண்டுகளாகவே எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாமல் புறக்கணிக்க படுவதாலயே தனி தெலுங்கானா ஒன்றே ஒரே தீர்வு என அம்மக்கள் நினைக்கிறார்கள்....இது மத்திய அரசின் தவறே அன்றி அம்மக்களோடது அல்ல...

அவசரம் அவசரமாக அறிவிப்பு வெளியிடாமல் மெதுவாக ஆக வேண்டிய காரியங்களை செய்திருந்தால், இத்தகைய போராட்டங்களை சந்திக்கa வேண்டி இருந்திருக்காது....

சரி இதை விடுங்க...நம்ம தமிழ் நாட்டை பிரிப்பதற்காக எழும் கோஷங்களை பற்றி என்ன நினைக்கிறேர்கள்? தமிழ் நாட்டை பிரிப்பது நன்மை பயக்குமா அல்லது அவ்வாறு எண்ணுவதே தவறாகுமா?????