Tuesday, December 1, 2009

கையூட்டு.....முதல்ல இவங்கள பிடிங்க...

நம்ம ஊருல எல்லா துறைகள்ளையும் உள்ள ஒரே ஒற்றுமை என்ன என்று நாம ஆராய்ந்து பார்த்தோம் என்றால் அது கையூட்டாதான் இருக்கும்....அதாங்க லஞ்சம்...அது இல்லாத துறை ஏதுவுமே நம்ம இந்தியால கிடையாது....அதுவும் நம்ம தமிழகத்துல அது சேர் போட்டு உட்கார்ந்து ஆடுது......சமீபத்துல இந்தியால எந்த மாநிலத்தில் லஞ்சம் ஊழல் அதிகமா இருக்குது என்று ஒரு சர்வே எடுத்தாங்க...அதுல நாம முதல் இடத்தை பிடித்து பெருமை அடைகின்றோம்......

அது என்னவோ இந்தியன் தாத்தாவில் இருந்து நம்ம லஞ்ச ஒழிப்பு போலீஸ் வரை பொறி வைத்து பிடிப்பது நூறு , இருநூறு லஞ்சம் வாங்குபவர்களைதான்..இதுவரை ஒரு அமைச்சர் லஞ்சம் வாங்கியதாகவோ இல்லை ஒரு முதலமைச்சர் லஞ்சம் வாங்கி பிடி பட்டதாகவோ செய்தி வந்ததில்லை....லஞ்சம் வாங்கி பிடி பட்டவர்களுக்கு இங்கு கடுமையான தண்டனைகளும் இல்லை...

இரண்டு வாரங்களுக்கு முன் நான் தி.நகர் சென்று இருந்தேன்...எப்பொழுதும் பணம் செலுத்தி பார்க்கிங் ஏரியால விட்டு தான் போவேன்...சரி இந்த முறை சென்னை சில்க்ஸ் போறதால, பாலத்துக்கு கீழ உள்ள பார்க்கிங் ஏரியால விட்டு போலாம் என்று பாலத்துக்கு கீழ வண்டில வந்தேன்...ஆனா என் நேரம் கொஞ்சம் கூட இடமே இல்லை...சரி அப்படியே நேர போய் காசு கொடுத்து வண்டிய பார்க் பண்ணலாம் என்று நேர போனேன்....இடது பக்கம் பாண்டி பசாரில் இருந்து எல்லா வாகனங்களும் தி.நகர் செல்லவும், துரைசாமி பாலம் செல்லவும் அப்படித்தான் வரும்....நான் கிடைச்ச சந்து வழியாக நேர போறேன், ஒரு போக்குவரத்து துணை ஆய்வாளர் வந்து என்னை மறிச்சு ஓரமா கூட்டிட்டு போறார்...சரி, ஓட்டுனர் உரிமம் தான் கேட்க போறார் என்று போன, அது ஒரூ வழி பாதை...நீங்க வந்தது தப்பு என்கிறார்...

அது ஒரு வழி பாதை என்பதற்கு எந்த ஒரு அறிவிப்பும் இல்லை...புதிதாக வருபவர்களுக்கு ஏப்படி தெரியும்?? அதுவும் நான் வரும் வரை பார்த்துட்டு இருந்து இருக்கிறார்...என்னை தடுத்து இருக்கலாம்....ஆனால் அது அவர் எண்ணம் இல்லை....அபராதம கட்டுங்க என்றார்...எவ்வளவு சார் என்றேன்...நானுற்று ஐம்பது ....நானும் எவ்வளவோ கெஞ்சி பார்க்கறேன்...காசு வாங்காம அவர் விடுறதா இல்லை...கடைசில நூறு ரூபாய் கொடுத்த பிறகுதான் என்னை விட்டார்..

ஒரு பொறுப்புள்ள அதிகாரி என்றால் நான் தப்பான வழியில் வரும் முன் என்னை தடுத்து இருக்க வேண்டும்....அதுக்குத்தான் போலீஸ் இருக்காங்க...அதை விட்டு விட்டு காசு பிடுங்குவதை மட்டுமே வேலையாக பார்க்க கூடாது...ஒரு சிலரால் நேர்மையான மற்றவர்களை கூட தப்பாக நினைக்க தோன்றுகிறது...இந்தியாவில் லஞ்சம் வாங்குபவர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்க வேண்டும்....அதை பார்த்து லஞ்சம் வாங்க மற்றவர்கள் யோசிக்க வேண்டும்.....

லஞ்சம் இல்லாத துறை ஏதாவது இருக்கிறதா????இருந்தால் சொல்லுங்களேன்.....

7 comments:

  1. ஆதரவு! கொடுத்தாச்சு, போதுமா??

    ReplyDelete
  2. comment moderation irukkillai, appuram ethukku word verification?? bore!

    appuram athan ambiyai atharikaringa poola irukke? appuram enna? varisaiya vanthu kummi adipanga. :P

    ReplyDelete
  3. @கீதா சாம்பசிவம்
    உங்கள் ஆதரவுக்கு ரொம்ப நன்றி....அடிக்கடி வாங்க!!

    ReplyDelete
  4. @வல்லிசிம்ஹன்
    ரொம்ப நன்றி!!அடிக்கடி வாங்க.

    ReplyDelete
  5. //ஒரு பொறுப்புள்ள அதிகாரி என்றால் நான் தப்பான வழியில் வரும் முன் என்னை தடுத்து இருக்க வேண்டும்...//

    இன்னா வாத்யாரே ,,,., நீங்க நோ என்ட்ரில வர்றீங்கன்னு தெரிஞ்சதும்,,, நினைச்சுருப்பாரு எலி பொறில சிக்கிடுச்சுன்னு... அவனுங்கல்லாம் பருப்பு வாத்யாரே,,,பொறுப்புகிடையாது

    ReplyDelete
  6. சரியா சொன்னிங்க பிரதாப்...ரொம்ப நன்றி...அடிக்கடி வந்து உங்க கருத்த சொல்லுங்க...

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.