Tuesday, November 24, 2009

என் பேச்சை கேட்டால்... தமிழக காமெடி.....

"தேர்தலில் ஒரு முறை மக்கள் என் பேச்சை கேட்டால், தமிழகத்தில் நல்லாட்சி நடக்கும்' என்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்...நடந்து கொண்டிருக்கும் ஆட்சி அவர் கூட்டணியில் அமைந்ததுதான் என்பது மறந்து விட்டது போலும்....இவர் மட்டுமல்ல, நமது தமிழக மக்களின் மறப்போம் மன்னிப்போம் மனது இருக்கும் வரை அனைத்து அரசியல் தலைவர்களும் இப்படித்தான் பேசுவார்கள்.....



ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை சார்ந்த மக்களுக்காக கட்சி நடத்தும் அய்யா தமிழக மக்கள் நலனை பற்றி அக்கறை கொள்வதில் மிக்க மகிழ்ச்சி நமக்கு...
ஒரு விஷயத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஜாதி பெயரை சொல்லி அரசியல் செய்யும் எந்த தலைவரும் (மன்னிக்கவும், மனிதரும்) அந்த ஜாதிக்கு நன்மை செய்ததாக சரித்தரம் இல்லை... ஜாதி என்பது அவர்கள் அரசியலில் நுழைய தேவைப்படும் ஒரு விசிடிங் கார்டு ..அவ்வளவே...நுழைந்த பிறகு விசிடிங் கார்டு தேவை இல்லை...



பா.ஜா.க. மத்தியில் ஆட்சி அமைத்த போது அவர் பேச்சை கேட்டு அவருக்கு ஓட்டு போட்டு அமைச்சரவையில் பங்கு பெற அனுப்பி வைத்தோம் ...தமிழ் மக்களுக்காக , இல்லை வேணாம் அவரை சார்ந்த மக்களுக்காக என்ன செய்தார் ??காங்கிரஸ் கூட்டணியிலும் அவர் பங்கு பெற அவர் பேச்சை கேட்டு அவருக்கு ஓட்டு போட்டு அனுப்பி வைத்தோம்....அவர் மகனுக்காக போராடி மத்திய அமைச்சரவையில் இடம் வாங்கியதுதான் மிச்சம்...அவராவது ஏதாவது செய்வார் என்று பார்த்தால், அவருக்கு புது புது மருத்துவ கல்லூரி ஆரம்பிக்க அனுமதி கொடுப்பதற்கும் ,எய்ம்ஸ் மருத்துவமனையின் தலை சிறந்த மருத்துவரும் தலைவருமான வேணுகோபாலனை வீட்டிற்கு அனுப்புவதற்குமே நேரம் சரியாக இருந்தது.


இப்போது மட்டும் அவர் பேச்சை கேட்டு என்ன நடந்து விட போகிறது ????இவரை மட்டும் நான் குறை கூறவில்லை.இந்தியாவில் உள்ள அரசியல்வாதிகள் பெரும்பாலும் இப்படித்தான் இருக்கிறார்கள்...அவர்கள் புத்திசாலிகளாக இருக்கிறார்களா இல்லை நாம் முட்டாள்களாக இருக்கிறோமா என்பது புதிராகவே இருக்கிறது....இப்போதும் கூட மத்திய அமைச்சரைவையில் எப்படியாவது தன் மகனை நுழைத்து விட வேண்டும் என்று நினைக்கிறாரே தவிர, மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருப்பதாக தெரிய வில்லை...


ஒரு தனி மனிதனை விமர்சிக்க நான் வரவில்லை...இதுதான் எல்லா கட்சி தலைவர்களின் நிலைப்பாடும்....ஜாதி ரீதியான கட்சிகளுக்கு மக்கள் ஆதரவு அளிக்க கூடாது....

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.